பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறியும் “ஜுவிகி” தொலைநோக்கி மூலம் இந்த பச்சை வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. துருவ நட்சத்திரத்திற்கு அருகில் இந்த பச்சை வால் நட்சத்திரம் தென்படும். வெகு தூர தொலைவில் பச்சை வால் நட்சத்திரம் தென்பட்ட நிலையில், அதனை டெலஸ்கோப் மூலம் பார்த்து வந்த நலையில், தற்போது 45 லட்சம் கிலோ மீட்டர் அருகில் இரவு 12 மணியளவில் இந்த நட்சத்திரம் தென்படவுள்ளதால் பொதுமக்கள் வெறும் கண்களால் காணலாம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வரும் 10ம் தேதி வரை இந்த பச்சை வால் நட்சத்திரம் வானில் தென்படும் என ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
Discussion about this post