மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தெரிவிக்கும் வண்ணம் புதிய அழைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 மணி நேரத்தில் பொதுமக்களின் குறைபாடுகள் சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நேரடியாகவும், வாட்ஸ்அப் மூலமும் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு வாட்ஸ்அப் மூலம் அளிக்கப்படும் புகார்களை 24 மணிநேரத்தில் அதிகாரிகள் சரி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சில அதிகாரிகள், புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல் புகார் மனுக்களை முடித்து வைப்பதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டை எழுந்து வந்தன. இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புகார் தெரிவிக்கும் முறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தனியாக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு அதற்கென பிரத்யேக எண் வழங்கப்பட்டது. 84 28 42 5000 என்ற எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்கள் பிரத்யேக மென்பொருளில் பதிவேற்றப்படும். இதன்பின் புகார்தாரரின் முழுப்பேச்சும் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த எண் மூலம் கால்சென்டரில் உள்ளவர்கள் வருடத்தின் 365 நாட்களுமே அவர்களது புகார்களை கேட்டறிந்து அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக மென்பொருளில்பதிவேற்றம் செய்வார்கள் அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பிறகு புகார் தாரருக்கு
அதற்குரிய விளக்கத்தை அளிக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த புகார் மனு முடித்து வைக்கப்படும்
ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக 24 மணி நேரத்திற்குள் தங்களது பகுதிகளில் இருக்கக்கூடிய குறைகளுக்கு தீர்வு கிடைப்பதால் மதுரை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
இந்த அதிநவீன வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த புகார் மையத்திற்கு மதுரை மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது
Discussion about this post