முகநூல் மூலம் பெண்கள் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடும் நபர் மீது இளைஞர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் பிரபாகரன். அவரது மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது புகைப்படங்களையும் முகநூலில் இருந்து எடுத்து, ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவேன் என்று அம்சத் பேகன் என்ற நபர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
Discussion about this post