ரெப்போ வட்டி விகிதம் மேலும் பூஜ்ஜியம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் உயர்ந்து, 6 புள்ளி இரண்டு ஐந்து சதவீதத்திலிருந்து 6 புள்ளி 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் கடந்தாண்டு 5 முறை உயர்த்தப்பட்டு 2 புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் உயர்ந்த நிலையில், நடப்பாண்டில் பூஜ்யம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் அதிகரிக்க உள்ளது. இதுகுறித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த 6%க்குள் பணவீக்கம் உள்ளதால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கடன் வாங்கியவர்களுக்கு சாதகமில்லை என்றாலும் டெபாசிட் செய்தவர்களுக்கு சாதகம் உள்ளது.
Discussion about this post