வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகையான ரெப்போ வட்டிவிகிதமானது 6.25 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இச்செய்தியினை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தற்சமயம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடப்பு நிதியாண்டில் இது ஆறாவது ரெப்போ வட்டிவிகித உயர்வு ஆகும். அதாவது ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு அளிக்கக்கூடிய கடன் தொகையின் விகிதமானது 6.25 சதவீத்தில் இருந்து வந்தது. தற்போது 0.25% இதனை அதிகரித்ததன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு இந்த கடன் அவர்களது தொகையிலுமிருந்து பெறப்படும். அதனால் மக்கள் அவதிப்பட வாய்ப்புள்ளது.