குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண வீக்கம் உயர்வு மற்றும் பொருளாதார தேக்க நிலையால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும், நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Discussion about this post