நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் மழையின் தீவிரம் குறைந்து இருப்பதால், சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவலாஞ்சி பகுதியில் மட்டும் ஒரு வாரத்தில் 297 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தில் மரங்கள் வேரோடு அடித்து செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் வழங்கப்பட்டன. மழை சற்று ஓய்ந்த நிலையில், உதகையில் இருந்து அவலாஞ்சி செல்லும் சாலையில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட இடங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன.
நிவாரண பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஓரிரு நாட்களில் நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post