ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க இந்திய அரசு தரப்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என்பதற்கு பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ‘ரபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய இந்தியா கட்டாயப்படுத்தியதாக பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே கடந்த மாதம் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு இருநாட்டு அரசு தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய நிறுவனங்களை தேர்வு செய்வதில் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு சுதந்திரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க இந்திய அரசு தரப்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என்பதை பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் மறுத்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தாங்களே சுதந்திரமாக தேர்வு செய்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.