கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக அனைத்து மாநில அரசு ஊழியர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதே போல் மத்திய அரசு ஊழியர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், தனியார் நிறுவனங்களும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நிதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு, 500 கோடி ரூபாய் நிதியாக வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட இருக்கிறது. அதே போல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Discussion about this post