ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42வது ஆண்டுப் பொதுக் கூட்டம், மும்பையில் உள்ள பிர்லா மதுஸ்ரீ சபகர் பகுதியில் நடைபெற்றது. ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார். இதில் மாதம் 700 ரூபாய் விலையில் அதிவேக ஜியோ ஃபைபர் சேவை செப்டம்பர் 5ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
ஜியோ ஃபைபர் சேவையின் ஆண்டு சந்ததாரர்களுக்கு ஜியோ ஃபைபர் தொடக்க சலுகையாக 4k டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அவர் அறிவித்தார். ஜம்மு காஷ்மீர், லடாக் பிரதேசங்களில் புதிய தொழில்கள் தொடங்க தொழில்முனைவோர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்ததை ரிலையன்ஸ் குழுமம் ஏற்று கொள்வதாகவும், ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வைத்துள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
Discussion about this post