ஈரானால் சிறைப்பிடிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டு சரக்கு கப்பலை விடுவித்து விட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் சரக்கு கப்பலை கடந்த ஜூலை மாதம் ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே மாதம் பாரசீக வளைகுடாவில் ஹோர்மு ஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்தின் ஸ்டெனா இம்பெரோ என்ற சரக்கு கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஈரானின் சரக்கு கப்பலை இங்கிலாந்து விடுவித்ததை அடுத்து, ஈரானும் இங்கிலாந்தின் கப்பலை விடுவித்து விட்டதாக கூறியுள்ளது. இன்னும் சில தினங்களில் சர்வதேச கடற்பகுதியை அந்தக் கப்பல் வந்தடையும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post