வடமாநிலங்களில் பொதுவாக திருமண வைபவம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசும் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரியில் திருமணவிழா ஒன்றில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில், ரூபாய் நோட்டுக்களை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் அள்ளி வீசினர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த திருமணத்தில் அள்ளி வீசிய ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுகள் பசுக்களை பாதுகாப்பதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Discussion about this post