கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தோழியிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்த இளைஞரை, அடித்து கொலை செய்த சம்பவத்தில், பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் சின்னம்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் கௌதம். இவர் கடந்த 7ம் தேதி தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் தோழியிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பெண்ணின் தந்தை, அண்ணன் மற்றும் மாமா ஆகிய மூவரும், கௌதமை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த கௌதம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேரையும் கைது செய்தனர்.
Discussion about this post