புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ரேக்ளா குதிரை பந்தயத்தை, மின்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
குமாரபாளையம் வட்டம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில், ரேக்ளா குதிரை பந்தயம் நடைபெற்றது.
பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை, உள்ளூர் குதிரை என 4 வகையான போட்டிகள் நடைபெற்றன.
குப்பாண்டபாளையம் எம்.ஜி.ஆர்., நகர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய இந்த ரேக்ளா குதிரை பந்தயம், சமயசங்கிலி பிரிவு வரை நடைபெற்றது. 10 மைல் முதல் 6 மைல் வரையிலான பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியை மின்துறை அமைச்சர் தங்கமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சீறிப்பாய்ந்து சென்ற குதிரை வண்டிகளுக்கு, சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் ஆர்வமாக கூடிநின்று உற்சாகமளித்தனர்.
Discussion about this post