புயல், கனமழை, வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நடைபெற்றது. புதுச்சேரி நகரப்பகுதிகளான கிருஷ்ணா நகர் உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்ற பாதுகாப்பு மீட்பு ஒத்திகையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஒத்திகையின் போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகளை மீட்பது, தீ விபத்திலிருந்து மக்களை காப்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Discussion about this post