ஃபானி புயலினால் உருக்குலைந்துள்ள ஒடிசா நந்தன்கனன் உயிரியல் பூங்காவில், மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் சிதைந்துள்ளதால் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 3500க்கும் மேற்பட்ட விலங்குகள் பூங்காவில் வசித்து வரும் நிலையில், ஃபானி புயலினால் அவற்றின் வசிப்பிடங்களாக விளங்கிய ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. எனினும் அதிர்ஷ்டவசமாக விலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் விலங்குகளுக்கான வசிப்பிடங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளைக் காக்க லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மறுசீரமைப்பு பணிகள் முடிந்து விரைவில் பூங்கா திறக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post