இளைஞர்களுக்குப் போதிய வேலையைத் தராத நரேந்திர மோடியின் அரசை மக்கள் புறந்தள்ள வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறியிருந்த நிலையில், இது குறித்த உண்மைத் தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், கடந்த ஆண்டு ஆறரை கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடியின் ஆட்சியை புறந்தள்ள இதுவே சரியான நேரமென்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Discussion about this post