தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நீர் மேலாண்மை திட்ட பணிகள் மற்றும் முதலமைச்சரின் குடி மராமத்து பணிகளை, முதன்மை பொறியாளர் அசோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீரை சேகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கிலும், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக, பொதுப்பணித்துறை சார்பில் நீர் மேலாண்மை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை, முதன்மை பொறியாளர் அசோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட 348 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட சோகத்தூர் ஏரியை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரி மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில், 10 ஏரிகளில் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ள, 4 கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post