ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்த நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176பேரும் உயிரிழந்த நிலையில், தனி விசாராணைக் குழுவை அமைத்து, விபத்து குறித்து ஈரான் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் இத்தகைய முடிவு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடுவானில் பறந்த விமானம் திடீரென தீப்பிடித்ததால், மீண்டும் விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்ப முயற்சித்த போது விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post