நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேவுள்ள புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் யானைகளுக்கு இன்று தொடங்கி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது.
முதுமலை காப்பகத்தில் நடக்கும் இந்த 48 நாட்கள் முகாமில் 24 வளர்ப்பு யானைகள் பங்கேற்றுள்ளன. பங்கேற்றுள்ள வளர்ப்பு யானைகள் முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் உடல் தகுதிக்கேற்ப வைட்டமின் மாத்திரை, புரதச்சத்து, சவனா பிரஷ் என பல வகையான உணவுகள், கரும்பு, பழம், வெல்லம், சத்து உருண்டை
வழங்கப்படுகிறது. மேலும் இந்த யானைகளுக்கு தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. முக்கியமாக யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறுவதையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு தினந்தோறும் நடத்தப்படும் யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.