மானியம் இல்லா சமையல் எரிவாயு விலை குறைப்பு

மானியம் இல்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களை பொறுத்து இந்தியாவில் அதன் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை புதன்கிழமை நள்ளிரவு முதல் 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14 புள்ளி 2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 574 ரூபாய் 50 காசுகளாக இருக்கும். இந்த மாதத் தொடக்கத்திலும் எல்பிஜி விலை 100 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டது. அதையும் சேர்த்து கணக்கிட்டால், மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 163 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் விலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Exit mobile version