பெட்ரோல்-டீசல் விலையை விட விமான எரிபொருள் விலை மிக குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
விமான எரிபொருள் விலை 14 புள்ளி 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொது மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் விலையை விட விமான எரிபொருள் விலை வெகுவாக குறைந்துள்ளது. விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்ட பின்னர் அதன் ஒரு லிட்டர் விலை 58 ரூபாய் 6 காசுகளாக உள்ளது. இது பெட்ரோல் விலையை காட்டிலும் கிட்டதட்ட 10 ரூபாய் குறைவாகும்.
இதனிடையே மானியம் அல்லாத மண்எண்ணெய் கூட 56 ரூபாய் 59 காசுகளாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தை விலை அடிப்படையில் விமான எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த டிசம்பர் 1-ம் தேதி 10 புள்ளி 9 சதவீதம் குறைக்கப்பட்ட பின்னர் தற்போது மீண்டும் விமான எரிப்பொருள் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.
Discussion about this post