பருவமழை தவறி பெய்ததால் பீட்ரூட் விளைச்சலில் வழக்கமான மகசூல் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பீட்ரூட் கிழங்கை நடவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் செடிகள் கருப்படித்து உள்ளன. இதனால் பீட்ரூட் விளைச்சல் குறைந்து இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குடகனாறு அணையில் தண்ணீரை முறையாக சேமித்து, விவசாயத்துக்கு பயன்படுமாறு உதவ வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post