சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பொதுப் பிரிவினரின் வயது வரம்பை 27 ஆக குறைக்க, மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும், நிதி ஆயோக் அமைப்பு, புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் 75 என்ற தலைப்பில், அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், 2022 -2023qம் ஆண்டிலிருந்து, சிவில் சர்வீஸ் தேர்வுகளில், பொதுப்பிரிவிருக்கான வயது உச்ச வரம்பை, 30லிருந்து, 27ஆக குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிப் பணிகளில், பிரிவுகள் அடிப்படையில் தரவரிசை வழங்குவதற்கு பதிலாக, வெற்றி பெற்றவர்களின் திறமை அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post