கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் முகாம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்து சட்டமன்ற உறுப்பினர் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதை அடுத்து, சமூக பாதுகப்புத்திட்டம், இலவச வீட்டுமனைப்பட்டா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முழுப்புல பட்டா மாற்றம், சிறு குறு விவசாய சான்று, வேளாண்மைத் துறை உபகரணங்கள் என மொத்தம் 471 பயனாளிகளுக்கு, 40 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் நிதியில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆயிரத்து 805 பயனாளிகளுக்கு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ராமன் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இதில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆயிரத்து 133 பயனாளிகளுக்கு 31 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிள் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வந்திருந்த, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத சிறுமியின் குறைகளை, பெற்றோர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, உடனடியாக நடவடிக்கையாக அமைச்சர், குழந்தையின் இரு காதுகளுக்கும் செவித்திறன் கேட்கும் கருவியை வழங்கினார். இதனைப் பார்த்த பொதுமக்கள், அமைச்சரை வெகுவாகப் பாராட்டினர்.
Discussion about this post