ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த போதிலும், வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை, வங்கிகள் குறைக்க முடியாது என அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார மந்தநிலையை போக்க மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி அவ்வப்போது வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை குறைத்து வருகிறது. 6 விழுக்காட்டிற்க்கு மேல் இருந்த ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஒராண்டில் 5 விழுக்காடு வரை குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறையும் போதெல்லாம் வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும் என்று அண்மையில் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. இது குறித்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்த போது, வாடிக்கையாளர்களுக்கான வட்டி கடனை குறைக்க வேண்டுமானால், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க நேரிடும் என்றும், இதனால் வங்கியின் முக்கிய மூலதனமான வைப்புத்தொகை செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வங்கியின் வருவாய் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
Discussion about this post