விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையை ஆழப்படுத்தி, புனரமைக்கும் பணியினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வீடூர் அணையை ஆழப்படுத்துவது குறித்து, விவசாயிகளின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எடுத்துச் சென்றார். இதனையடுத்து, 42 கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், வீடூர் அணையை ஆழப்படுத்தி, புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக, அதற்கான பணிகளை பூமி பூஜை செய்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.