கவிஞர் கண்ணதாசன் பிறந்த கிராமத்தில் உள்ள நினைவு இல்லம் அவரது நினைவுநாளன்று பூட்டிக் கிடந்ததால், அதனைப் பார்வையிட சென்றவர்கள் ஏமாற்றதுடன் திரும்பிச்சென்றனர்…
கவிஞர் கண்ணதாசனின் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டியில் அவரது நினைவு இல்லம் உள்ளது. இந்த கிராமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கண்ணதாசனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் வருபவர்கள் அவ்வூரில் உள்ள கண்ணதாசனின் உவுவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அவரது நினைவு இல்லத்தை பார்வையிட செல்வார்கள்.
இந்நிலையில் இவ்வருட அவரது இல்லம் பூட்டியிருந்ததால் அங்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மேலும், இதுபற்றி விசாரித்த போது கண்ணதாசனின் குடும்பத்தினர் சில காலமாகவே அவரது நினைவு இல்லத்தை பூட்டி வைத்திருப்பதாகவும், இங்கு வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, திறக்கச் சொல்லி பார்த்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post