ஹாலிவுட்டில் சிம்பன்ஸி குரங்குகளை வைத்து எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற planet of the apes திரைப்படம் மீண்டும் வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனி நாகரிக சமுதாயமாக மாற்றத்தால் மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் வாழ்விடச் சண்டைகள் நிகழத் தொடங்கி போர் வரை இட்டுச்செல்லும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம் முதன் முதலில் பியல் போல் என்பவரால் 1963-ஆம் ஆண்டு நாவலாக எழுதப்பட்டு 1968ல் திரைப்படமாக உருவானது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து 4 பாகங்கள் வெளியாகின. இதன் பிறகு 70-களில் இக்கதை தொலைக்காட்சித் தொடராகவும் ஒளிபரப்பானது.
இதன்பின் பல ஆண்டுகள் கழித்து இயக்குநர் டிம் பர்டன் இயக்கத்தில் 2001-ஆம் ஆண்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் திரைப்படமாக வெளியானது. படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்படவில்லை. மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து 2011-ஆம் ஆண்டு ‘ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ மீண்டும் சிறு மாற்றங்களுடன் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதன்பின் 2017 வரை தொடர்ச்சியாக இரண்டு பாகங்கள் வெளியானது. இதனோடு இந்த பட வரிசையின் கதையும் முடிந்தது.
தற்போது மீண்டும் ‘ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ திரைப்படமாக உருவாகவுள்ளது என்றும், இதனை ‘மேஸ் ரன்னர்’ படத்தின் இயக்குநர் வெஸ் பால் இயக்கவுள்ளார் என்றும் வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது முந்தைய பாகங்களின் தொடர்ச்சியா அல்லது சிறு மாற்றங்களுடன் கூடிய மறு உருவாக்கமா என்பது தெரியவில்லை. இந்த படத்தை டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது. 20th செஞ்சுரி நிறுவனத்தை டிஸ்னி வாங்கிய பிறகு தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு என்பதால் இப்போது இருந்தே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Discussion about this post