இந்திய மொபைல் சந்தைகளில் அறிமுகமான ஒரே ஆண்டில் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று ரியல்மி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தைகளில் சீனாவை சேர்ந்த ரியல்மி நிறுவனம் கடந்தாண்டு மே 15ம் தேதி களமிறங்கியது. மற்ற மொபைல்களில் இருந்து தனித்துவமான சிறப்பம்சங்களால் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தன அந்நிறுவன மொபைல்கள். இதனால் இந்திய மொபைல் சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உருவானது.
இந்தியாவில் துவங்கப்பட்டு தற்போது ரியல்மி நிறுவனம் உலகம் முழுவதும் 20 நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது. கடந்த ஓராண்டு நிலவரப்படி இதுவரை 1.5 கோடி ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமய நிலவரப்படி இந்திய மொபைல் சந்தையில் 4வது இடத்தில் இருக்கும் ரியல்மி நிறுவனம், உலக அளவில் அசுர வளர்ச்சி பெறும் மொபைல் நிறுவன பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.