மதுரையில் சேவல் சண்டை போட்டி நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புதூர் ராமவர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார், இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது புதூர் பாரதியார் புரம் பகுதியில் பாதுங்கி இருந்த மர்ம கும்பல் அம்மிக்கல்லை கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா மேல் எரிந்து நிலைகுலைய வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததுள்ளது.
உயிருக்கு பயந்து சாலையில் ஓடிய ராஜா சிறிது தூரம் சென்று சாலையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த 2016 ஆம் ஆண்டு வாடிப்பட்டி பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டை போட்டி நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஸ்ரீதர் என்பவரை கொலை செய்த வழக்கில் ராஜாவும் ஐந்தாவது குற்றவாளியாக இருந்துள்ளார்.
அதற்கு பழிக்குப் பழி தீர்க்கும் நோக்கோடு நடந்தது இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையரின் தலைமையில் தனிப்படை போலீசார், 8 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடிவந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்டதாக நிஜாமுதீன், குட்டை கார்த்திக், ஹரிகிருஷ்ணன், தவுபிக் என்ற நான்கு இளைஞர்களை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உயிருக்கு பயந்து சாலையில் ஓடும் ராஜாவை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யும் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகரில் மட்டும் கடந்த 8 நாட்களில் நான்கு கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post