மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப எதிர்வினையாற்றும் ரோபோ ஒன்று ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரோபோ நீல் (ROBO NEEL) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பல்திறன் கொண்ட எந்திர மனிதன் 10 மாதங்களில் செய்து முடிக்கப்பட்டது.
சிலிக்கன் கொண்டு வடிவமைக்கப்பட்ட முகம் கோபம்,அழுகை,சிரிப்பு போன்ற உணர்வுகளைக் காட்ட ஏதுவாகவும், உணரிகள்(சென்சார்கள்) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கண்,மூக்கு போன்றவை காட்சி மற்றும் ஒலியை உள்வாங்கி அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் வாடிக்கையாளர்களைக் கவனிப்பது , வீட்டில் முதியோர்களை கவனிப்பது என உணர்வு ரீதியான வேலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்கிறார் ஐஐடி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ,இதைக் கண்டுபிடித்த மாணவர் நீலமாதாப் பெஹேரா.