பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் திறம்பட செயல்பட்ட மோடியை மீண்டும் பிரதமாக தேர்வு செய்ய வேண்டும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் பெஞ்சமின் பேசினார். தமிழகத்தில் உள்ளாட்சித் துறைக்கு தேவயான நிதியை வேட்பாளர் வேணுகோபால் தமிழகத்திற்கு அதிக அளவில் பெற்றுத் தந்ததாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இந்த தொகுதி பற்றி எதுவும் தெரியாத நிலையில், தொகுதி பற்றி நன்கு அறிந்த வேணுகோபாலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார்.
Discussion about this post