வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவில்,186 வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள 92வது எண் வாக்குச்சாவடியில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. சம்பந்தப்பட்ட தேர்தல் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது..இந்த வாக்குச்சாவடியில் 548 ஆண்களின் வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post