புல்வாமா பாணியில் மீண்டும் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை தகவல் அளித்துள்ளதால், எல்லைப் பகுதிகள், முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.புல்வாமா பகுதியில் கடந்த மாதம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது பயிற்சி முகாம்கள் மீது, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாலேயே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கமளித்தது. இந்நிலையில், புல்வாமா பாணியில் மீண்டும் தாக்குதல் நடத்த, ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Discussion about this post