புதிதாக வழங்கப்படும் கிரெடிட் கார்ட் டெபிட் கார்டுகளைக் கொண்டு உள்நாட்டு பணபரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நிகழும் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி புதிதாக வழங்கப்படும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகளுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. முன்பு கார்டுகளைக் கொண்டு எந்தவிதமான பணப் பரிவர்த்தனைகளையும் எளிதாக மேற்கொள்ளும் வசதி இருந்த நிலையில், இனி அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், புதிதாக வழங்கப்படும் கிரெடிட், டெபிட் கார்டுகளைக் கொண்டு உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும், சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தனியாக அதற்கான வசதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள கார்டுகளில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்படாமல் இருந்தால் தானகவே ரத்து செய்யப்படும் என்றும், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post