ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவியை விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவரான விரால் ஆச்சார்யா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி குறித்து பேசினார். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிசர்வ வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவியை விரால் ஆச்சார்யா தற்போது ராஜினாமா செய்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி ஏற்ற விரால் ஆச்சார்யாவின், பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்கள் உள்ளது. இந்தநிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version