2018-19 ஆம் நிதியாண்டில் வங்கி மோசடிகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி

2018-19ம் நிதியாண்டில் வங்கி மோசடிகள் அதிகரித்துள்ளாதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி 2018-19 ஆம் நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் நிலவும் பணப்புழக்கம், கள்ள நோட்டுகள், வங்கி மோசடிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதி நிலை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டில் நாட்டில் நடைபெற்றுள்ள வங்கி மோசடிகளின் மதிப்பு 71 ஆயிரத்து 543 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கி மோசடிகளின் மதிப்பைவிட 74 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், கடந்த நிதியாண்டை விட வங்கி மோசடி வழக்குகள் 15 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதேபோல 3 லட்சத்து 17 ஆயிரத்து 384 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், அதிகபட்சமாக 500 ரூபாய் நோட்டுகளில் 21 ஆயிரத்து 865 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 2017-18ம் ஆண்டு இருந்த அளவைவிட 121 சதவிகிதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. 

Exit mobile version