ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தாஸ் தலைமையில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 5.15 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. தொடர்ந்து 5-வது முறையாக ரெப்போ கடன் வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.