ஆர்.பி.ஐ. நாணயக் கொள்கைக் கூட்டம்: ரெப்போ வட்டி விகிதம் குறையுமா?

நடப்பு நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் ஆறாவது நாணயக் கொள்கை கூட்டத்தின் இறுதி நாளான இன்று, ரெப்போ வட்டி விகிதம் 0.50 முதல் 0.25 சதவீதம் வரை குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் தங்களுக்கு தேவையான பணத்தை ரிசர்வ் வங்கியிடம் ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் கடனாக பெறுகின்றன. ஒவ்வொரு நாணயக் கொள்கை கூட்டத்தின் போதும் ரெப்போ வட்டி விகிதம் முடிவு செய்யப்படும். கடைசியாக நடைபெற்ற இரண்டு கூட்டங்களில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் மீதான வட்டி விகிதம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version