நீட் விலக்கு இரகசியம் எங்களின் பாக்கெட்டில் உள்ளது என்று சொன்னவர், இன்றைக்கு நீட் விலக்கிற்கு சட்டப்போராட்டம் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார். அமைச்சரவையில் உள்ள ஒரு விளையாட்டுத் துறை அமைச்சர் பிரதமரை சென்று தனியாக சந்திப்பது அரசு வழக்காறு இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கே அழைத்துச் செல்லப்படவில்லை, மூத்த அமைச்சர்கள் யாரும் கூட்டிச் செல்லப்படவில்லை. அப்படியென்றால் இந்த சந்திப்பு எதற்காக? ஒருவேளை தேர்தல் பிரச்சாரத்தில் பாரத பிரதமர் மோடி அவர்களை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வசைபாடியதற்கு மன்னிப்பு கேட்க சென்றிருப்பாரோ என்னவோ? அது பிரதமருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஆண்டவனுக்கும் மட்டுமே தெரியும். இந்த சந்திப்பு என்பது உதயநிதி ஸ்டாலின் அவரை நிலைநிறுத்தி அடையாளப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட அடையாள அரசியலே. இந்த சந்திப்பினால் தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு எள் அளவும் பயனில்லை என்று முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அவர் பேசிய காணொளியானது கீழ்கண்ட சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது. சொடுக்கவும்!
Discussion about this post