அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் இடம் பெறாதவர்கள் கைது செய்யப்பட மாட்டர்கள் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டு வரைவு இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இறுதி பட்டியலில், 3 கோடியே 11 லட்சத்து பேரின் பெயர்கள் இடம்பெற்றன. மேலும் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு இருந்தன. இதனையடுத்து விடுப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமை நிரூபிக்க, உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை 100ல் இருந்து 300 ஆக அதிகரித்திருப்பதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் இடம் பெறாதவர்கள் கைது செய்யப்பட மாட்டர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் தொடர்ந்து கிடைக்கும் என உறுதியளித்த அவர், சட்டத்தின் கீழ் படிந்து அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Discussion about this post