திருத்தணி ரயில் நிலையம் அருகே வீட்டில் பதுக்கிவைத்து ஆந்திராவுக்கு கடத்தயிருந்த ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசு, கூட்டுறவு துறை சார்பில் நியாய விலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசியை வழங்கி வருகிறது. இவை குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு திருத்தணி மார்கமாக ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து துணை வட்டாட்சியர் டேனியல் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள பூட்டிய வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ எடைக் கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
Discussion about this post