கல்லூரி விடுதிகளில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் கரப்பான் பூச்சி சாதம், எலி சாதம் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வருகிறது ஜேபிஆர் பொறியியல் கல்லுரி. இங்கு இன்று மாணவர்கள் சாப்பிடச் சென்றபோது, உணவில் கரப்பான் பூச்சி, எலி ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. தண்ணீரை பார்த்த போது, அதில் தவளை மிதந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான காணொலிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றனர்.
Discussion about this post