பெல்ஜியம் நாட்டில் உள்ள சரணாலயத்தில் எம்பெரர் வகையைச் சேர்ந்த ஆண் பென்குவின் ஒன்று பிறந்துள்ளது.
ஆண்ட்வெர்பில் அமைந்துள்ள சரணாலயத்தில் ஏராளமான பென்குவின்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள எட்டி மற்றும் ரா எனும் பெயர்களைக் கொண்ட இரு பென்குயின்களுக்கு எம்பெரர் பென்குயின் பிறந்துள்ளது. முட்டையிலிருந்து பொரிந்து வெளிவந்த குஞ்சு பென்குயின் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக உலரவைக்கப்பட்டது. அர்பான் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த குஞ்சு பென்குயின்தான் கடந்த 3 ஆண்டுகளில் இங்கு பிறந்த முதல் ஆண் பென்குயின் எனவும் கூறப்படுகிறது. அரிய வகை உயிரினமான எம்பெரர் வகை பென்குயின்கள், உலகம் முழுக்க சுமார் 60 ஆயிரம் மட்டுமே தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post