இலங்கையில் நடைபெற்ற போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அப்பகுதி மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர்,இலங்கையில் நடைபெற்ற போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தெரிவித்தார். யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ரணில் விக்ரமசிங்கே இவ்வாறு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post