நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரதமராக தனது பணியை மீண்டும் தொடர்வேன் என இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் சிறிசேனவிற்கும், பிரமதராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே தொடர்ந்து அரசியல் மோதல் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 26ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்ச பிரதமராக பதவியேற்றார். இதனையடுத்து நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் சிறிசேன அறிவித்தார்.
இந்தநிலையில், முடக்கி வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் வரும் 5ஆம் தேதி கூட்டப்படும் என சிறிசேனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்தான் பிரதமராக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் வெற்றி பெற்று பிரதமராக தனது பணியை மீண்டும் தொடர்வேன் என ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post