ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாசி மாதம் என்பது சிவனுக்கு உகந்த மாதம் என்பதால், உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தி கரகோஷத்துடன் தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .
Discussion about this post