கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, நேற்று கடலுக்கு சென்றனர். 570 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க மிகுந்த எதிர்பார்ப்போடு புறப்பட்டு சென்றனர்.

இதில், 200-க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால், அச்சமடைந்த மீனவர்கள், வெறுங்கையுடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கை மீனவர்களிடயே அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version