ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் சென்னை எழும்பூர் இடையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஏறக்குறைய 12 மணிநேரங்கள் செல்லும் இந்த ரயில், ராமநாதபுரம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாளை இரவு 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் பகல் பத்தே முக்கால் மணிக்கு எழும்பூரை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புக் கட்டண ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.